மனசுக்குள் ஒரு மலர்நதி நீ

மனசுக்குள் நகரும்
மலர்நதி நீ
இதயத்தில் இறங்கும்
உயிர்மழை நீ

தேய்தல் இல்லாமல்
வளர்தல் இல்லாமல்
இமைகளுள் ஒளிரும்
பௌர்ணமி நீ

அலையும் இல்லாமல்
கரையும் இல்லாமல்
அன்பால் நிறையும்
ஆழ்கடல் நீ !

எழுதியவர் : இளவெண்மணியன் (21-Jul-17, 7:25 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 171

மேலே