நூலடி நுண்ணிடை நொந்தொடியும் பூங்கொடி

நாலடி நீநடந்தால் நோகாதோ நின்பாதம்
பாலடி மேனிபார்ப் போர்கண் களின்விருந்து
நூலடி நுண்ணிடை நொந்தொடியும் பூங்கொடி
காலடி தன்னைக் கவனமாகப் பார்த்துவை
வேலடி நின்விழியின் வீச்சு

----ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (5-Dec-24, 10:22 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 19

மேலே