எதிரி வெளியே இல்லை
காதலை அவன் எழுத
காமப் பேய் என்கிறாள்
அவன் கொலைப்பழி ஏற்கிறான்
காதல் பெயரில் நீ
காமம் விற்கிற கவிஞன் நீ
உன்னை ஒன்றும் செய்ய முடியாது
உன்னுடைய கவிதைகளை
நிச்சயம் ஒழிப்பேன் என்கிறாள்
காதலுக்குள் உறையும்
காமப்பேய் அறியாள்
உடலின்றி உயிர் உறையுமோ?
பாவம் ஜோதி
அவனுடைய கவிதைக்கு எதிரி
வெளியே இல்லை..
18:21, செப்-11, 2024