வாராத பூந்தென்றல் வந்து வருடிட

வாராத பூந்தென்றல் வந்து வருடிட
போரா டியமொட்டு பூத்துச் சிரித்தது
நீரோடை யில்விழுந்து நீந்த எடுத்ததை
காரோடும் கூந்தல் கயல்விழி முத்தமிட்டாள்
நீரிலே விட்டாள் நிலா

----ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (4-Dec-24, 5:39 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 21

மேலே