அன்பின் துளியில் பிரபஞ்சம்

காற்றில் மறையும்
ஒலியின் கரைசல்
விமர்சனம்
அதைப்பற்றி
ஏன் கவலை ?

எழுத்தில் வரைந்த
சாடல்கள் எல்லாம்
கோடுகள் புள்ளிகள்
கோபம் எதற்கு?

பேச்சை எழுத்தை
கடந்து போனபின்
அன்பின் துளியொன்று
நெஞ்சில் எஞ்சுமெனில்
அதுவே உண்மை !

அதற்காக மட்டும்
உருகலாம் ;உறையலாம்
பிரபஞ்சம் அதற்குள்
ஒளிந்திருக்கிறது
கண்டுகொள்ளலாம்
வா அன்பே !

எழுதியவர் : இளவெண்மணியன் (21-Jul-17, 7:32 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 227

மேலே