கொரோனா எனும் கூற்றுவன்
௮ண்டம் அலரும் அணுவே
கண்ணுக்குத் தெரியா காலனே
கோள உருவே கோரத்தாண்டவமே
சீனத்தில் உருக்கொண்டு எமை சிதறடிப்பவனே
தொட்டோ தெடாமலோ அண்டிக்கொண்டு
எமை அடிமையாக்கி வீட்டுச்சிறையில் விதிமுடிப்பவனே
வல்லரசு என மார்தட்டியவரை யெல்லாம்
மண்டியிட செய்தவனே...
கொரோனா எனும் கூற்றுவனே...
இயற்கையை இனிமையாக்கி
எமை மட்டும் இம்சிபதேன்
மானிடனே...
ஆலை அமைத்தாய் அது சரி
ஆனால் அறமிழந்து காற்றையும் கடலையும்
ஆறு அண்டமென அனைத்தயும் அசுத்தமாக்கினாயே
வாகனப்புகையால் வாயுவையும் மாசாக்கினாயே
குழந்தையை கூட கொஞ்ச நேரமில்லாமல்
காசு பணமென காற்றாய் அலைந்தாயே
உனது ஜம்பது ஆண்டு தவற்றை
நான் ஜந்து வாரங்களில் சரிசெய்தேன்
ஓசோன் ஓட்டையை அடைத்தேன்
கங்கை நீரும் இன்று குடிநீரானது
உன் வாகன விபத்தால் வாழ்விழந்தவர்களை விட
என்னால் மரணிப்பவர்கள் குறைவுதானே
எனை அரக்கனெனும் மானிடனே
உண்மையில் யார் அரக்கன்.......