ஏண்டா..ஏண்டி
🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮
*சமுதாயக் கவிதை*
*கவிஞர் கவிதை ரசிகன்*
🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮
ஏண்டி
ஏண்டி
உங்களுக்கு
சூடு சொரணை
மானம் வெட்கம்
ரோசம் எதுவுமே இல்லையா
வயிற்றுக்கு
உப்பு போட்டு தானே
சோறு தின்கின்றீரகள்...
ஆமாம்
நன்றி கெட்ட நாயே! என்று
திட்டுகின்றீர்களே!
நான் எப்பொழுது நன்றி கேட்டிருக்கிறேன்
இனிமேல்
நன்றி கெட்ட மனிதன் என்ற திட்டங்கள்
திரும்பவும் யாராவது
அப்படி சொன்னீர்கள்
நான்
நாயாக இருக்க மாட்டேன்
மனிதனாக மாறிவிடுவேன்....
➖➖➖➖➖➖➖➖➖➖➖
இறைவனுக்கு என்று
சொல்லி செய்த
பொங்கல்
சுண்டல்
பஞ்சாமிர்தம்
கூல்
உடைத்த தேங்காய்
பழம்
எல்லாவற்றையும்
மனிதர்களே
சாப்பிட்ட பிறகாவது
உணர்ந்திருக்க வேண்டாமா
தெய்வம்
நமக்குள் தான்
இருக்கிறது என்பதை
➖➖➖➖➖➖➖➖➖➖➖
தலையில்
தேங்காய் உடைப்பது
தார் சாலையில்
பூசணிக்காய் உடைப்பது
நெற்றியில் பட்டை போடுவது
உடலில்
மதச் சட்டையை போடுவது
தலையை மொட்டை அடிப்பது
ஆன்மீகவாதி போல் நடித்து
நாட்டை கொள்ளையடிப்பது
ஒன்றாக சேர்ந்து
பண்டிகை போடுவது
ஓரிரு நாட்களில்
சண்டை போடுவது
இதைத் தவிர
இன்றைய பக்தி
பெரியதாக என்ன செய்தது...?
🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀
ஆட்டுகளிடமும்
மாட்டுகளிடமும்
எந்தப் பாகுபாடும் இல்லை....
அவை இரண்டும்
புல்லைத்தான் தின்று
உயிர் வாழ்கிறது....
அதைத் தின்று வாழும்
இந்த மனிதர்களிடம் மட்டும்
ஏன் இத்தனை பாகுபாடு....?
〽〽〽〽〽〽〽〽〽〽〽
அன்று வாழ்ந்த
அரசியல்வாதிகள்
செத்துப் போன பிறகு
சிலை வைக்கும் அளவிற்கு
வாழ்ந்தனர்....
ஆனால்
இன்றைய அரசியல்வாதிகளும்
வாழ்கின்றனர்
செத்துப் போனவர்களின்
சிலையை வைத்து....!
*கவிதை ரசிகன்*
🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀