வோட்டுக்கு நோட்டு
வோட்டை விற்பாராம் பின்னர்
ஒப்பாரி வைப்பாராம் ஆனாலும்
இவர் நல்லவராம்... அரசியல்வாதி
எல்லாம் அயோக்கியராம்
கொள்ளை அடித்ததைத் தான்
கொஞ்சம் தருகின்றான்
உன்னை அடிமை ஆக்கத்தான்
இது அட்சாரம் என்கின்றான்
ஆனாலும் நீயோ...
வந்தது லாபம் என்கிறாய்
இது யார்வீட்டுப் பணம் என்கிறாய்
நீ செய்யும் தவறு தெரியாமலே
செத்து மடிகின்றாய்
கற்பை விற்றுவிட்டு பின்
கற்பளிப்பு கூப்பாடு ஏன்?
வாக்குக்கு நீ வாங்கியதே
உன் வாய்க்கு அரிசியாக மாறியதோ
வீட்டுக் காவலுக்கு திருடனை வைப்பாராம்
பின்னர் கொள்ளை போய்விட கூப்பாடு போடுவாராம்
ஆனாலும் இவர் நல்லவராம்
அரசியல்வாதி எல்லாம் அயோக்கியராம்
வோட்டுக்கு நோட்டு இனி
ஒழியட்டும் இவ்விளையாட்டு
பணநாயகம் ஒழிப்போம்
ஜனநாயகம் காப்போம்