நிழல் நிஜமானது

என் நிழல் நிஜமானது
நான் அப்பா ஆனேன்
என் பிம்பம் நீயன்றோ
எனது எண்ணம் உனதன்றோ

உன்னை மெய்யில்
சுமந்தது தாய்யெனினும்
மெய்யே... உன்னை மனதில்
சுமந்தது நானன்றோ

தூளியில நீ ஆட
துள்ளியது என் மனமே
துள்ளிவந்து நீ அணைக்க
சுவர்க்கம் மண்ணில் வந்ததென்ன

நீ கொஞ்சும் மொழி பேசயில
நான் குழந்தை ஆனதென்ன
தத்தி தத்தி நீ நடக்க
தந்தை உள்ளம் பதைத்ததென்ன

பள்ளியில நீ படிக்க
நான் பாடம் கற்றதென்ன
வாழ்கையை நீ படிக்க
வரலாறாய் நான் ஆனதென்ன

பரந்த இப்பூமியும்
பல்வேறு உயிரினமும்
உனை செதுக்கும் உளியாகும்
பொற்சிலையே...
இதை நீ உள்வாங்க
உன் வாழ்க்கை ஒளியாகும்.

எழுதியவர் : கோ. கலியபெருமாள் (16-Mar-17, 8:02 pm)
சேர்த்தது : கலியபெருமாள்
Tanglish : nizhal nijamaanathu
பார்வை : 207

மேலே