தேவதைகளின் மரணம்
வீட்டுப் பூவினை
காட்டுப் பூனைகள் களவாட....
தோட்ட மெங்கும்
கண்ணீர் செந்நீராய்ப் பெருகியோட....
கேட்கும் அலறல் சத்தம்
செவிகளில் அம்புகளாய்ப் பாய்ந்திட....
இரக்கமற்ற மிருகங்களின்
வலிய தாக்குதலால்
பூவிரல் கொண்ட நகங்கள்
செயலற்று வீழ்ந்திட....
உடுத்திய மேலாடையில்
ஓட்டைகள் அதிகம் குடியேற....
காமம் மிகுந்த அரக்கர்களின்
கொடிய வெறியில்
மென்னுடல் காயங்கள் வாங்கிட....
நெருப்பு மஞ்சத்தில்
கருப்பு முதலைகளின்
விசம் நிறைந்தப் பற்கள்
கனியுடல் கடித்திட....
எரிமலைப் பிழம்புகள்
மேன்மேலும் விழுந்து வதைத்திட....
மூச்சுக் காற்று சூடாகி
இரத்த நாளங்கள் தீப்பிடித்து
இதயம் சுக்கு நூறாய் வெடித்து
துடி துடித்தே அடங்குகிறது
என் உயிர் தேவதைகளின் உயிர்கள்......
...இதயம் விஜய்...