மாயம் செய்யும் மழையோ

மேகம் விட்டு வீழ்ந்த நீ என்

தேகம் தொட்டு செல்வாயோ

நாணம் கொண்ட நங்கையினை-நீ

நடனம் கொள்ள வைப்பாயோ

தோகை கொண்ட மயிலுமானேன்-நீ

தோளில் பட்டு படர்கையிலே- நான்

கானம் பாடும் குயிலுமானேன்-என்

தாளை விட்டு நழுவயிலே- உன்னில்

கரைந்தாட விரும்புகிறேன்
மண்ணில் - நீ

விழுந்தாடும் வேளையிலே.....

மாயம் செய்யும் மழையே எனை

காயமுற செய்யாதே- என்

மைவிழியை கரைத்த போதும்-என்

மெய் முழுதும் நனைத்த போதும்-
உனில்

மையல் கொண்டு தவிக்கின்றேன்-நீ

மையம் கொள்ளும் நாட்களுக்காய்.....

எழுதியவர் : சுவாதிகுணசேகரன் (18-May-20, 1:00 pm)
பார்வை : 271

மேலே