பூக்கள் எழுதும் புதினம்

நிழல்விரிந்த நெடுஞ் சோலையில்
அழகின் அத்தியாயங்களை எழுதும் பூக்கள் !
விழுதுவிட்ட ஆலமரமும்
தனக்கில்லா பூக்களைப் பார்த்து மகிழும் !
பொழுது புலரும் போது தொடங்கி
பொழுது சாயும் போது முடியும் பூக்களின் புதினம் !
பக்கம் பக்கமாக விரியும் பூக்களின் புதினத்தை
நித்தம் பார்ப்பவன் இயற்கையின் ரசிகன் !

எழுதியவர் : கவின் சாரலன் (19-May-20, 9:09 am)
பார்வை : 116

மேலே