சிருஷ்டி

கருவில் பிண்டம்
குயவன் கையில் களிமண்
களிமண் அவன் கையில்
மெல்ல மெல்ல அழகிய மண்பாண்டமாய்
உருவாகிறது ,,,,,,,,

கருவில் பிண்டம்
மெல்ல மெல்ல உருமாறி
சிசுவாய் மாறுகிறது

குயவன் கையிலிருந்து
வெளி வருகிறது
அழகிய மண்பாண்டம்
உயிரில்லா ஜடப்பொருள்

கருப்பையிலிருந்து வெளிவருகிறது
அழகிய சிசுவின் உடல்
உயிர்க்கொண்டு அழுதுகொண்டே
மனிதன் பிறப்பு

கருவின் பிண்டத்தை
உருமாற்றியது யார்
யாரந்த குயவன்
அந்த உடலில்
உயிர்த்த துடிப்பு ....
யார் வைத்து ? எப்போது ?
கண், காடு, மூக்கு, தலை
வாய், கழுத்து... இதயம்
வயிறு, குடல்கள்
ரத்த நாளங்கள், ரத்த ஓட்டம்
ஸ்ரிஷ்டிக்காமல் வந்தனவா ...??

களிமண் ...... பாண்டமானது
குயவனின் சிருஷ்டி.....

மனிதன் மற்ற உயிரினங்கள்
மரம் செடி கொடிகள்
பூக்கள் காய் பழங்கள்....
தானாக வருவனவா
பூவில் வாசம் வைத்து யார்
காயில் புளிப்பு ... கனியில் இனிப்பு
யார் தந்தது

சிருஷ்டி...ஸ்ரிஷ்டிகர்த்தா

உண்டா இல்லையா
கொஞ்சம் யோசிக்கலாமா !!!
புரிபவர்க்கு புரியும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-May-20, 2:26 pm)
பார்வை : 59

மேலே