அதிகாலை பொழுது

தூய வானம்
துயிலெழும் ஆதவன்
ஆதவனின் முத்தத்தில்
நாணுகின்ற நாணல்
சில்லென்ற பூங்காற்று
சிலிர்க்கின்ற என்னவள்
தூய நீரோடை
துள்ளியெழும் மீன்கள்
வைகறை பொழுது
வரவேற்கும் குயிலோசை
பூமியின் சிரிப்பாய்
புன்னகைக்கும் பூக்கள்
இத்தனையும் ரசிக்க
இறைவன் படைத்தது
எங்களை மட்டுமா?
உங்களையும் தான்....

எழுதியவர் : கோ.கலியபெருமாள் (17-Mar-19, 9:27 am)
சேர்த்தது : கலியபெருமாள்
Tanglish : athikalai pozhuthu
பார்வை : 1815

மேலே