கலைஞருக்கு ஓர் கண்ணீர் அஞ்சலி

அண்ணாவின் தம்பியே - தமிழ்
அன்னையின் தவப்புதல்வனே
(தமிழ்) தாயைக் காத்த தனையனே
திரைக்கதை நாயகனே - உந்தன்
தீபொறி வசனத்தால் மண்ணில்
தமிழைத் தீயாய் வளர்த்தவனே

அணைத்து சாதியினரையும்
அர்ச்சகராக்கி அழகு பார்த்தவனே
சமூகநீதி காத்தவனே

உதயசூரியன் உதிக்குமுன்னே தினம்
விழிக்கும் தமிழ்சூரியனே
கவிஞர்களின் காதலனே
தமிழின் காதலியே

உன் கவிதைகள் இங்கே
உந்தன் கரகரத்த பேச்செங்கே?
உன் புரட்சி கருத்துகள் இங்கே
உந்தன் புன்னகை எங்கே?
என் உயிரிணும் மேலான
உடன் பிறப்பே... என்பாயே
உந்தன் உடன்பிறப்புக்கள் இங்கே
உன் உயிர் எங்கே?

தண்டவாளத்தில் தலைவைத்தது முதல்
உன் கடைசி இடத்திற்காக கண்ணுறங்கியபடியே
போராடிய போராளியே

குறளேவியமே நெஞ்சுக்கு நீதியே
நீ இன்று சிந்திப்பதை நிறுத்தியிருக்கலாம்
ஆனால் நீ சிந்திய கவிதையும் கருத்தும்
என்றென்றும் எங்கள் சிந்தனையில்....

நமன் உன்னை வென்று எடுக்க முடியுமோ?
நீதான் சென்றுயிருப்பாய் அங்கும்
செந்தமிழ் வளர்க்க......

எழுதியவர் : கோ.கலியபெருமாள் (8-Aug-18, 9:06 pm)
சேர்த்தது : கலியபெருமாள்
பார்வை : 137

மேலே