நாட்டாமை

ஆலமரத்தடியில் ஆண்சிங்கமாய்
அமர்ந்துகொண்டு கண்ணியமாய்
சாலச்சிறந்ததொரு தீர்ப்புதனைச்
சாற்றிடுவார் நாட்டாமைதான் !
காலமாற்றத்தினால் நாட்டினிலே
காணவில்லை எம்மருங்குமின்று .
பாலகனுக்கும் வீரம்வருமே
பாரினிலே நாட்டாமையினால் .
சீலமெங்கிலும் வேண்டுமின்றே
சிறப்புசெய்வர் சல்லிக்கட்டைதான் !


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (19-Jan-17, 4:33 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 179

மேலே