ஓயாது எங்கள் அறப்போர்
உரிமை காக்க
ஒன்றுபட்டது
எம் தமிழ் இனம்.
ஜல்லிக்கட்டு காளைகளாய்
திமிறித் துடிக்குது
எங்கள் மனம்.
தடைபோட்டு ஒடுக்கிட முடியும்
என்று ஒருபோதும்
நினைக்காதே!
மடை திறந்த வெள்ளம் நாங்கள்
கனவிலும் அதை
மறக்காதே!
உதிரம் முழுக்க
வீரம் ததும்பும்
வீரத் தமிழன் தானடா!
எங்கள் இனத்தை
அழித்திட எண்ணும்
இழிகுணம் ஏனடா!
வாடி வாசல்களெல்லாம்
வாடிக்கிடக்க
மூடிப் போட்டோம் என்று நினைத்தாயோ?
சாடிவரும் காளையை
ஓடிவந்து அடக்கிட
வியூகம் வகுக்கிறோம் அறியாயோ?
காட்சி பொருளாக்கிய
எம் காளையை
மீட்டு எடுப்போம் பாரடா!
அதுவரை சற்றும் ஓயாது
நாங்கள் நடத்தும்
அறப்போரடா!
த.மணிகண்டன்