Rajani Arthi K - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  Rajani Arthi K
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  27-Jan-2017
பார்த்தவர்கள்:  102
புள்ளி:  8

என் படைப்புகள்
Rajani Arthi K செய்திகள்
Rajani Arthi K - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jun-2017 7:51 pm

மேகங்களில் மறைந்து
மெல்லினமாய் ஒலித்தே..
மிளிர்கின்ற மின்மினிபூச்சிகளான
நட்சத்திரங்களை...
தாவிபிடிக்க முயன்று
தவறிவிழுந்த கவிஞனின்
கதறல் இது...
காணாமல் போன கடவுளே....
நான் பேனாமுனையில்
பிதற்றுகிறேனென்றால்...
என் சிந்தனை தூறல்களை
உடனடியாக சிதைத்து விடு....
என் பிதுங்கிய கண்களை
பிடுங்கி எறிந்து விடு...
என் விரல்களை வெட்டி
வீதியில் வீசி விடு...
நிரந்திரமாய் நானும்
நிராகரிக்கப்படுவேனென்றால்....
என் இதயத்தை நிறுத்தி
இருளை விலக்கி விடு...
என் கனவுகளை கலைத்து
கல்லறையில் பூட்டி விடு...
சிலையாய் நானோ
பிணமாகிப் போகிறேன்...
என்னை சிரச்சேதம்
செய்து விடு!!!

மேலும்

மன்சூர் அளித்த கேள்வியை (public) மன்சூர் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
10-Jun-2017 2:12 pm

எழுத்து தளத்தில் உள்ள சந்தேகங்கள்

மொத்த புள்ளிகள் உள்ளது அதை வைத்து என்ன செய்வது?

கவிதைகள் எதைக்கொண்டு சிறந்தவை பட்டியலில் இடம்பெறுகின்றன?

சிலருக்கு வாசகர் எனவும் சிலருக்கு எழுத்தாளர் எனவும் குறிப்பிட படுகிறதே அது எதை வைத்து?

மேலும்

புதியதாக சேர்பவரை வாசகர் என்றும் நம்முடைய பதிவுகளை பதிவேற்றும் பொருட்டு எழுத்தாளர் என்றும் எழுத்து தல நிறுவனத்தால் மாற்றப்படுகிறது என்று உங்களை போல் இதே சந்தேகம் எழுப்பிய எனக்கு ஒரு நண்பர் பதில் எழுதினார்....... சிறந்தவை என்பது அதிகம் பேரால் படிக்கப்பட்டு அதிகம் புள்ளிகள் பெற்ற பதிவுகள் சிறந்த பதிவாக வெளியிடுகிறார்கள் என்பது என் யூகம். 13-Jun-2017 4:53 pm
நன்றி நண்பரே எழுத்து தள இயக்குனர்கள் விளக்குவார்கள் என நம்புகிறேன்! 11-Jun-2017 2:16 pm
நண்பா எனக்கும் சேம் டவுட்... 20 புள்ளி வரை வாசகர்னு இருந்தது அதுக்கப்புரம் எழுத்தாளர் னு மாறிடுச்சு.. மத்தபடி இந்த புள்ளிகள் எப்படி குடுக்குறாங்க, அத வச்சி என்ன பன்றது, சிறந்த கவிதைய எப்படி தேர்ந்தெடுக்குறாங்க? னு தெரியல ப்ரோ.. " நல்ல படைப்புகள் நெறைய பார்வையிலேயே படாம முடங்கி கிடக்குது" என்ற வருத்தம் எனக்கும் இருக்கு.. நான் எழுதுனது சில சிறந்த கவிதை பிரிவுல வந்தப்போ , அத விட அருமையான பலரோட கவிதைகள் வெளியவே தெரியல.. பார்வைகளின் அடிப்படையில் சிறந்த கவிதைனு தெர்ந்தெடுக்குறாங்களோ னு ஒரு டவுட்.. பலரின் சார்பா இந்த கேள்விய கேட்டதற்கு நன்றி.. 11-Jun-2017 6:44 am
Rajani Arthi K - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jun-2017 12:57 pm

கலைந்த கேசத்தினூடே
கலையாத கனவுகளுடன்
வாழும் என்னை பற்றி...
நடைபாதையில் படுத்துக்கொண்டு
நடுவானில் பறப்பது போல் கனவு காணும் சிறுவன் நான்....
கிழிந்த ஆடை உடுத்தி குப்பைகளை
கிளறிக் கொண்டிருப்பவன் .... என் அழுக்கு சட்டைக்குள்
ஆயிரம் கிழிசல்களில்
ஆயிரம் வலிகள்
பொதிந்திருப்பதை
யாரறிவார்???
அப்பன் பெயர் தெரியாத நானோ
அம்மாவின் பெயரும் அறிந்திருக்கவில்லை....
அநாதையாய் நானோ
அன்பில்லாமலே வளர்கிறேன்...
மண்டப வாசலிலே
மணிக்கணக்கில் காத்துக்கிடக்கிறேன்...
நாயுடன் போட்டியிட்டு
எச்சில் இலையை எட்டிப்பிடிக்கிறேன்...

மேலும்

Rajani Arthi K - Rajani Arthi K அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Feb-2017 8:31 pm

என் முத்தழகியை ரசித்த
முதல் தருணம்...
திருத்தப்படாத புருவங்கள் வழியே
ராட்டினக் கண்களும் நாட்டியமாடும்
மதுரவாய் திறந்தாலே
மல்லிகை மணம் வீசும்...
சொல் வரிசையும் தடுமாறும்
அவள் பல் வரிசை கண்டு...
சிம்னி விளக்கிலும் ஜொலித்திடும்
அவள் ஜிமிக்கி...
கூந்தலிலே மலரும்
மவுனமாக ஊஞ்சலாட...
கொலுசின் ஓசை கேட்டு
கொலுவில் பொம்மையும் குதூகலிக்கும்...
சிந்தனைகள் சிதறிப் போகும்
சிந்தாமணியின் முகம் கண்டு...
கண்ணதாசன் கண்ணில் அகப்படாத கன்னி இவளோ???
மன்மதன் அம்புக்கும் மயங்காத
மங்கை இவளோ???
என அதிசயித்தேன்...
காதலென்றால் காததூரம்
கடந்த என்னை...
கவிதை எழுத வைத்துவிட்டாள்...
என் காதல் அழகி....!!

மேலும்

மிக்க நன்றி....நண்பரே... 10-Jun-2017 7:47 pm
கவிதையில் ஒரு சிற்பத்தை செதுக்கிவிட்டீர்கள் ...அருமை 10-Jun-2017 5:34 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) Sureshraja J மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
31-Mar-2017 11:54 am

121.வெள்ளைக் காகிதம் கையளவு உள்ளத்தின்
கடலளவு உணர்வுகளுக்கு அணை கட்டுகின்றது

122.கொள்ளை போன மணலை நினைத்து
வற்றிப் போன குளங்கள் துக்கம் அனுஷ்டிக்கின்றன

123.ஏழையின் வாசலோரம் அனாதையான நிலவும்
தூங்காத வறுமைக்கு தாலாட்டுப் பாடுகின்றது

124.அன்பான சிட்டுக் குருவியின் அழகான குடும்பத்தை
தத்தெடுத்து வளர்க்கின்றது அனாதை இல்லங்கள்

125.நிலத்தை கிழித்து முளைவிடும் அரும்புகள்
இறைவனோடு நேரடியாக உரையாடுகின்றன

126.கனவோடு உறங்கிக் கிடக்கும் இதயம்
புதையுற்ற வாழையின் வேரை போல
விழி வெள்ளத்தில் கப்பல் கட்டி நகர்கின்றது

127.ஆயுதங்கள் ஏந்தும் யுத்தத்தை விட
எழுத்துக்கள் ஏந்தும் வா

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 07-May-2017 8:50 am
மின்னும் பொன் வரிகள் ஒவ்வொன்றும் அருமை... வாழ்த்துக்கள் நண்பா 30-Apr-2017 5:55 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 19-Apr-2017 12:16 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 19-Apr-2017 12:13 am
Rajani Arthi K அளித்த படைப்பில் (public) ELANGOVAN S மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Feb-2017 11:43 pm

தம் கோபக்கனலால்...
மதுரையை எரித்தாள் கண்ணகி
கண்ணே நீயோ என்
மனதை எரித்துவிட்டு செல்கிறாய்...
கோவக்கார கிளியே
கோவைப்பழமாக சிவப்பது ஏனோ...
அரவம் இல்லாத சாலையில்
சாளரம் வழியே உன்னை தேடியே
ஏமாற்றத்தை எண்ணி நகைக்கிறேன்...
கடைக்கண் பார்வைக்காக
காலத்திடம் கடன் வாங்கி
காத்துக்கிடக்கிறேன் கனிமொழியே..
அற்பமாய் எண்ண
வேண்டாம் சிற்பமே...
உன்னை தூரமாய் நின்றே
தூரலாய் ரசித்திடுவேன்....
தாரமாய் நீயும் வந்தால்
தங்கமே உன்னை தாங்கிடுவேன்..!!!

மேலும்

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி... 10-Jun-2017 7:54 pm
தனிமையின் தவிப்பு 10-Jun-2017 5:31 pm
பிரிவு சுகமான சுமை..... 16-Feb-2017 8:04 pm
அன்பான உள்ளங்கள் காலத்தால் சில நாட்கள் விதியென பிரித்து வைக்கப்படுகிறது 16-Feb-2017 6:45 am
Rajani Arthi K - Rajani Arthi K அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jan-2017 12:25 pm

மணமாகாத மணப்பெண் நான்...
பட்டுப்புடவைகள் பளபளக்க
பாத்திரங்கள் பத்திரமாய் காத்திருக்க...
நகைகளை நளினமாய் நான் எடுக்க..
பெண் பார்க்கும் படலமும்
படபடவென ஆரம்பமானது...
காட்சிப்பொருளாய் கணநேரம்
வந்து நிற்க...
மாப்பிள்ளையை மனதார
நான் ரசிக்க...
வரதட்சணையோ வரம்பு மீறிச் சென்றது...
என் வறுமையும் பொறுமையாக விவாதிக்கப்பட்டது...
உடன் வந்திருந்த சுற்றமும்
என் மீது குற்றம் கண்டுபிடிக்க...
திரும்ப வருகிறோம் என்று கூறிச்
சென்றவர் திரும்பாமலே சென்றனர்..
ஒப்பனை செய்து ஓய்ந்து விட்டேன்...
காட்சிப்பொருளாய் நின்று
களைத்து விட்டேன்...
என் மாங்கல்ய கனவும்
மங்கிப் போனது...
முதுமை தோற்றமும்
முகத

மேலும்

வரதட்சணையால் வாழ்வை தொலைத்தோர் பலர்...... 16-Feb-2017 7:56 pm
நாகரீக உலகில் உள்ளங்களுக்கு மதிப்பில்லை சீதனமே பெறுமதியானது 16-Feb-2017 6:51 am
Rajani Arthi K - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2017 11:43 pm

தம் கோபக்கனலால்...
மதுரையை எரித்தாள் கண்ணகி
கண்ணே நீயோ என்
மனதை எரித்துவிட்டு செல்கிறாய்...
கோவக்கார கிளியே
கோவைப்பழமாக சிவப்பது ஏனோ...
அரவம் இல்லாத சாலையில்
சாளரம் வழியே உன்னை தேடியே
ஏமாற்றத்தை எண்ணி நகைக்கிறேன்...
கடைக்கண் பார்வைக்காக
காலத்திடம் கடன் வாங்கி
காத்துக்கிடக்கிறேன் கனிமொழியே..
அற்பமாய் எண்ண
வேண்டாம் சிற்பமே...
உன்னை தூரமாய் நின்றே
தூரலாய் ரசித்திடுவேன்....
தாரமாய் நீயும் வந்தால்
தங்கமே உன்னை தாங்கிடுவேன்..!!!

மேலும்

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி... 10-Jun-2017 7:54 pm
தனிமையின் தவிப்பு 10-Jun-2017 5:31 pm
பிரிவு சுகமான சுமை..... 16-Feb-2017 8:04 pm
அன்பான உள்ளங்கள் காலத்தால் சில நாட்கள் விதியென பிரித்து வைக்கப்படுகிறது 16-Feb-2017 6:45 am
Rajani Arthi K - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2017 2:49 am

தாவணிப் பெண்ணே...
தாவர அழகியே...
திருவிழாவில் உன்னைக் கண்டபோதே
திருமணக்கோலத்தில் கண்டுவிட்டேன்...
ஒப்பனை இல்லாத ஓவியமாய்
நீ ஒற்றையடிப் பாதையில்...
ஓரக்கண்ணால் ரசித்த போதே...
உன் மைதீட்டிய கண்களில் நான்
மையலிட்டதை அறிந்து கொண்டேன்
பருத்தி பூவைப் போல
வருத்திக் கொள்ள வேண்டாம்...
வரம் வாங்கி வருகிறேன்
உன் கரம் பிடிக்க....!!!!

மேலும்

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.... 16-Feb-2017 8:01 pm
காலத்தின் சம்மதத்தில் வாழ்க்கையின் சங்கமம் 16-Feb-2017 6:47 am
நன்றி... 13-Feb-2017 5:02 pm
கவிதை சிறகு விரித்து பறக்கிறது... அருமை... வாழ்த்துக்கள் தோழமையே... 13-Feb-2017 2:44 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (29)

C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
user photo

மன்சூர்

பாண்டிச்சேரி
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
பிரகாஷ் வ

பிரகாஷ் வ

நாமக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (29)

இவரை பின்தொடர்பவர்கள் (31)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
தேவி சு

தேவி சு

தூத்துக்குடி
மேலே