காதல் அழகி
என் முத்தழகியை ரசித்த
முதல் தருணம்...
திருத்தப்படாத புருவங்கள் வழியே
ராட்டினக் கண்களும் நாட்டியமாடும்
மதுரவாய் திறந்தாலே
மல்லிகை மணம் வீசும்...
சொல் வரிசையும் தடுமாறும்
அவள் பல் வரிசை கண்டு...
சிம்னி விளக்கிலும் ஜொலித்திடும்
அவள் ஜிமிக்கி...
கூந்தலிலே மலரும்
மவுனமாக ஊஞ்சலாட...
கொலுசின் ஓசை கேட்டு
கொலுவில் பொம்மையும் குதூகலிக்கும்...
சிந்தனைகள் சிதறிப் போகும்
சிந்தாமணியின் முகம் கண்டு...
கண்ணதாசன் கண்ணில் அகப்படாத கன்னி இவளோ???
மன்மதன் அம்புக்கும் மயங்காத
மங்கை இவளோ???
என அதிசயித்தேன்...
காதலென்றால் காததூரம்
கடந்த என்னை...
கவிதை எழுத வைத்துவிட்டாள்...
என் காதல் அழகி....!!!!