தாவர அழகி

தாவணிப் பெண்ணே...
தாவர அழகியே...
திருவிழாவில் உன்னைக் கண்டபோதே
திருமணக்கோலத்தில் கண்டுவிட்டேன்...
ஒப்பனை இல்லாத ஓவியமாய்
நீ ஒற்றையடிப் பாதையில்...
ஓரக்கண்ணால் ரசித்த போதே...
உன் மைதீட்டிய கண்களில் நான்
மையலிட்டதை அறிந்து கொண்டேன்
பருத்தி பூவைப் போல
வருத்திக் கொள்ள வேண்டாம்...
வரம் வாங்கி வருகிறேன்
உன் கரம் பிடிக்க....!!!!