தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 13--முஹம்மத் ஸர்பான்

121.வெள்ளைக் காகிதம் கையளவு உள்ளத்தின்
கடலளவு உணர்வுகளுக்கு அணை கட்டுகின்றது

122.கொள்ளை போன மணலை நினைத்து
வற்றிப் போன குளங்கள் துக்கம் அனுஷ்டிக்கின்றன

123.ஏழையின் வாசலோரம் அனாதையான நிலவும்
தூங்காத வறுமைக்கு தாலாட்டுப் பாடுகின்றது

124.அன்பான சிட்டுக் குருவியின் அழகான குடும்பத்தை
தத்தெடுத்து வளர்க்கின்றது அனாதை இல்லங்கள்

125.நிலத்தை கிழித்து முளைவிடும் அரும்புகள்
இறைவனோடு நேரடியாக உரையாடுகின்றன

126.கனவோடு உறங்கிக் கிடக்கும் இதயம்
புதையுற்ற வாழையின் வேரை போல
விழி வெள்ளத்தில் கப்பல் கட்டி நகர்கின்றது

127.ஆயுதங்கள் ஏந்தும் யுத்தத்தை விட
எழுத்துக்கள் ஏந்தும் வாசகம் வீரமானது

128.கள்ளிப்பால் ஊட்டும் தாயின் உள்ளம்
ஏழ்கடல் மூழ்கியும் அகலாத தீட்டு

129.மூங்கில் காடுகளை கடக்கும் சுவாசங்கள்
சப்தஸ்வரங்களில் புதுமைப் புரட்சி செய்கின்றன

130.ஓடாமல் நின்று போன சுவர்க் கடிகாரம்
உணராமல் விட்ட நொடிகளை நினைக்கின்றது

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (31-Mar-17, 11:54 am)
பார்வை : 192

மேலே