​அன்றும் இன்றும்

-------------------------------

நீரின்றி இல்லை உலகு
இன்று
நீரின்றி தவிக்குது நாடு ...

வாய்மையே வெல்லும்
இன்று
பொய்மையே வாழ்கிறது ..

உழைத்து வாழ்பவனே உயர்வான்
இன்று
பிழைக்கத் தெரிந்தவனே வாழ்கிறான் ...

ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு
இன்று
பிளவுப்பட்டால் கூடுது செல்வம் ..

திருத்திக் கொள்பவனே மனிதன்
இன்று
திருந்தாத உள்ளங்களே அதிகம் ..

தாயை வணங்கிடுவார் தெய்வமாக
இன்று
முதியோர் இல்லங்கள் கோவிலாகிறது ..


-------------------------------------

​பழனி குமார் ​

எழுதியவர் : பழனி குமார் (31-Mar-17, 2:08 pm)
பார்வை : 481

மேலே