தீர்வு
இடர் இல்லா வாழ்க்கை
இன்றும் என்றும் இல்லாததோ !
தீர்வை தேடி அலைந்தால்
தேடி வந்து சொன்னது
மாற்றம் !
ஒப்பு கொண்டு போனால்
ஓடி ஒளியாமல் நின்று
மாற்றத்தை உருவாக்கி செல் !
மாற்றம் செய்ய முடியாவிடின்
மனமென்ற குளத்தை குழப்பாமல்
இடரை இயற்கை தந்த
வரமென விட்டுச் செல் !