அவளும் காதலும்

அவளும் காதலும்

கதிரவன் மேனி
புதிரான புன்னகை
வெள்ளை நிறம்
கொள்ளை அழகு
அரும்பு மீசை
குறும்பு பார்வை-நான்
விரும்பும் இதயம்..
பார்த்த கணம்-உயிர் பூ
பூத்த உணர்வலை
நேச மின்சாரம்
நெஞ்சுக்குள் பாய்ந்தது கட்டியனைத்து முத்தமிட
முட்டி மோதிய மனது- வேர்களை தட்டாது இலைகளை நனைத்த சாரளாய் உயிரோடு
ஓரமாய் உறைந்தது..
அச்சம் கொண்ட
அன்பான அணங்கிவள்
மடம் உணர்த்தும்
மங்கையிவள்
நாணம் புதைத்த நல்ல நங்கையிவள்
வெட்கம் உரசும்
வெண் மனத்தவள்
பயர்ப்பு பறையும்
பசுங்கிளியிவள்
அகத்தே அத்தனையும்
அணிந்த பேதயிவள்
தடுத்தது பெண்மை-உரு
எடுத்தது வேதனை
விழி நீர் சிந்த
மொழி இழந்தாள்
ஒருதலைக் காதலுடன்
இரு விழி சுருண்டாள்
யாருமில்லா தனிமையில்
யாவும் கற்பனையாய்....

எழுதியவர் : S.Jeyarani (31-Mar-17, 5:00 pm)
Tanglish : avalum kaathalum
பார்வை : 171

மேலே