கவிஞனின் கதறல்
மேகங்களில் மறைந்து
மெல்லினமாய் ஒலித்தே..
மிளிர்கின்ற மின்மினிபூச்சிகளான
நட்சத்திரங்களை...
தாவிபிடிக்க முயன்று
தவறிவிழுந்த கவிஞனின்
கதறல் இது...
காணாமல் போன கடவுளே....
நான் பேனாமுனையில்
பிதற்றுகிறேனென்றால்...
என் சிந்தனை தூறல்களை
உடனடியாக சிதைத்து விடு....
என் பிதுங்கிய கண்களை
பிடுங்கி எறிந்து விடு...
என் விரல்களை வெட்டி
வீதியில் வீசி விடு...
நிரந்திரமாய் நானும்
நிராகரிக்கப்படுவேனென்றால்....
என் இதயத்தை நிறுத்தி
இருளை விலக்கி விடு...
என் கனவுகளை கலைத்து
கல்லறையில் பூட்டி விடு...
சிலையாய் நானோ
பிணமாகிப் போகிறேன்...
என்னை சிரச்சேதம்
செய்து விடு!!!