வாழ்வின் சித்தாந்தம்
நிறத்துவேஷம் கொண்ட காதலென்றும் நீடிப்பதில்லை...
சாதித்துவேஷம், இனத்துவேஷம், மதத்துவேஷம், நிறத்துவேஷம்,
மொழித்துவேஷம்,
போன்ற துவேஷங்களெல்லாம் காதலுக்கு மட்டும் எதிரிகளல்ல;
உண்மையான அன்பிற்கும் எதிரிகளே...
தன் சாதியை,
தன் மதத்தை,
தன் இனத்தை,
தன் மொழியை,
தன் நிறத்தை எவன் ஒருவன் உலகில் சிறந்ததெனவும், உயர்ந்ததெனவும்,
அழகெனவும் எண்ணுகிறானோ, அவனே உண்மையான இருவிழிகளற்ற மூடனாவான்...
தன்னைச் சார்ந்தவர்களிடம் மட்டும் அன்பு கொண்டுள்ளதாய் மோகம் கொண்டு வாழும் எந்த மனிதனும் நிச்சயமாக மன நிம்மதியென்ற வாசனையைச் சிறிதும் உணரமாட்டான்...
கடவுள் நம்மீது அன்பும், கருணையும் கொண்டிருக்கிறாரென்பதால் நாம் செய்யும் எந்தத் தவறையும் மன்னித்துவிடுவாரென்ற கருத்தில் இந்த சமூகத்தில் நிகழ்த்தப்படுகின்ற குற்றங்களே அதிகம்...
எழுத்தின் வாசனை அறியாதவர்கள் எவ்வளவு மூடநம்பிக்கைகளில் மூழ்கி இருந்தார்களோ, அதைவிட பன்மடங்கு மூடநம்பிக்கையில் மூழ்கியிருக்கிறார்கள் நன்கு கற்ற கல்வியாளர்கள்...
சமத்துவம் இன்றும் உச்சரிப்பு நிலையில் மட்டுமே நீடிப்பதால்,
இம்மக்கள் உண்மையன்பை அறிய தவறியவர்களாய் தங்களைத் தாங்களே அழிப்பதற்குத் துடிக்கிறார்கள்.....