இரக்கமற்ற வாழ்க்கை

வழிநெடுகிலும்
நிரம்பிக் கிடக்கின்றன

வெற்றிப் பெற்றவர்களின்
புன்சிரிப்புகளும்
தோல்வியுற்றவர்களின்
கண்ணீர் துளிகளும்

தப்பிச் சென்றவைகளின்
கால்தடங்களும்
இரையாகி போனவைகளின்
எலும்புத் துண்டுகளும்

இரக்கமற்ற அரக்கனாய்
கண்டும் காணாமலும்
கடந்து செல்கிறது
வாழ்க்கை

எழுதியவர் : Sunflower (11-Jun-17, 11:20 pm)
சேர்த்தது : சூரிய காந்தி
பார்வை : 177

மேலே