உறவுகள்
பிறக்கும் போதும் யாரையும் அழைத்து வருவதில்லை
இறக்கும் போதும் யாரையும் அழைத்துப் போவதில்லை
இவை இரண்டிற்க்கும் இடையில் பூக்குமாம் அழகிய உறவுகள்
அந்த அழகிய உறவுகளுக்குள் ஏனோ ஆயிரம் மோதல்கள்
போட்டிகள், பொறாமைகள், கோபங்கள், சங்கடங்கள், சண்டைகள் என பலக் காரணங்கள் உறவுகளைப் பிரிக்க இருந்தாலும்,
அன்பு ஒன்று போதுமே உறவுகளை இணைத்திட
மீண்டும் மனிதராய் பிறப்பதும் இல்லை
பிறந்தாலும் இதே உறவுகள் தொடர்வதும் இல்லை
எனது என்று நிரந்திரமாகச் சொல்ல எதுவும் இல்லை
ஜாதி... மதம்...
ஏழை... பணக்காரன்...
நீ...நான்...
என்று எதுவும் பாராமல் வாழும் வரை அன்பை பகிரலாமே