ஆனந்த யாழை மீட்டேன் --- முஹம்மத் ஸர்பான்

திங்கள் போல் உன் முகம்
ஞாயிறு போல் புன்னகை
பூக்கள் போல் மேன்மை
மொழி யில்லாக் கவிதை
கண்கள் மூடும் தென்றல்
முத்தம் திருடும் சத்தம்
இதயம் வரைந்த ஓவியம்
இறைவி புகழும் காவியம்
முன்பனி சிந்தும் மார்கழி
ஒளியில் நீந்தும் புல்வெளி
கருவில் பிறந்த தேவதை
மார்பில் ஊரும் ஆருயிர்
இன்பம் எழுதும் புத்தகம்
துன்பம் மறைந்த நூலகம்
அழுகை உந்தன் சங்கீதம்
துயிலும் எந்தன் வானவில்
வேதம் சொன்ன புனிதம்
மனிதம் நிறைந்த மனிதன்
அன்பில் புகுந்த என்னை
மரணம் மீட்கும் எல்லை
அன்னை போல் பிறந்தாய்
தொட்டில் வாங்க நான்
நதிகள் போல் ஓடினேன்
உயிரில் ஏதோ செய்தாய்
தாலாட்டுப் பாட நான்
ஆனந்த யாழை மீட்டேன்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (16-Nov-17, 6:16 pm)
பார்வை : 240

மேலே