MALARVIZHI - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : MALARVIZHI |
இடம் | : குடவாசல் |
பிறந்த தேதி | : 29-Dec-1981 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 27-Oct-2017 |
பார்த்தவர்கள் | : 348 |
புள்ளி | : 45 |
எழுத்தாளர்
என்னை கண்டதும்
கையில் இட்ட மருதனியாய் சிவந்திடும்
உன் கண்கள் சொல்லிடும்
என்னோடு உனக்கான காதலை
அவளின் வரவிற்காய் காத்திருந்து,
செந்நிற கோபத்துடன் சென்றிடும் அவனை
வெள்ளி நகைப்போடு எட்டிப்பார்க்கிறாள் நிலா!
அவளின் வரவிற்காய் காத்திருந்து,
செந்நிற கோபத்துடன் சென்றிடும் அவனை
வெள்ளி நகைப்போடு எட்டிப்பார்க்கிறாள் நிலா!
அரவம் சென்ற வழியெல்லாம்
நெளிவு சுழிவுகள்
சற்றே உற்று பார்த்தல் தெரிந்துவிடும்
அது அரவம் அல்ல உன் கைவிரல் என்று.
அரவம் சென்ற வழியெல்லாம்
நெளிவு சுழிவுகள்
சற்றே உற்று பார்த்தல் தெரிந்துவிடும்
அது அரவம் அல்ல உன் கைவிரல் என்று.
உன்மேல் கொண்ட அன்பினால்
அலையென புரண்டு தாவி வருகிறேன்!
நீயும் என்னை நோக்கி வருகையில்
பெண்மை பெருங்கடலில் நான் திரும்பிவிடுகிறேன்!
அவள் பேசும் மொழி
எனக்கு புரிவதில்லை!
அவள் கண் பேசும் மொழி
என்னைதவிர யாருக்கும் புரிவதில்லை!
சம்பவங்களும், சம்பாசனைகளும்
நிகழும்முன்னே சங்கமிக்கும்
விழிகள் நான்கும்!
சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆகிறது
மனைவி உயிருக்கு போராடுகிறாள்
இரண்டு கைகளும் செயலிழந்த நிலையில்
உடல் முழுவதும் கொடுமையான நோய்கள்
தொலைந்த உறவுகள், தொலையாத வியாதிகள்
தொல்லை தரும் பசி என்று
தனது சுயநலத்திற்கு
பரிதாப வார்த்தைகளை
அடகு வைத்து காசு கேட்காமல் !,
பார்வை இல்லை இருந்தும்
நேர்வழியில் செல்ல கையில்
நீண்ட கம்பியொன்று ,
உலகத்தில் தனக்கு தெரிந்த நிறம்
கருப்பு ஒன்றுதான் என்று
மீண்டும் சொல்லும்
கறுப்புக் கண்ணாடி கண்களில்,
சொற்ப நேரமே நின்று செல்லும்
பேருந்துகளில் கூட நடை தளராமல்
கைகளில் பேனா , பென்சில்களை ஏந்தி
விற்று செல்லும் அவரை
பார்த்தால் மறுக்காமல் ஏதேனும்
வாங்கிகொள்ளுங்கள் நீங்களும் .
கை
வாழ்வெங்கும் வண்ணங்கள் பூசும்
வானளாவ கதைகள் பேசும்
பூப்போன்ற புன்னகை வீசும்
பூங்காற்றை போல் வாசம்
குழந்தைகளே நீங்கள்தானே எங்கள் தேசம்!
171.ஓர் ஆகாயத்தை வைத்து கொண்டு
பல கோடி வீண்மின்கள் சண்டையிடுகிறது
172.வேர்களின் சுவாசத்தை களவாடி
சாதாரண மண்ணும் உரமாகிறது
173.மக்களை ஏமாற்றும் அரசியலை விட
ஓடுகின்ற சாக்கடை வெள்ளம் தூய்மையானது
174.பூக்களை கையில் வைத்துக் கொண்டு
குப்பைகளை தேடியலைகிறது ஆசைகள்
175.பொறாமை மனதில் விளைகின்ற போது
மனிதனின் ஏழாம் அறிவு மிருகமாகிறது
176.நாகரீக உலகின் பொருளாதாரத்தில்
விபச்சாரச் சந்தைகள் ஒரு குறிகாட்டி
177.இறைவன் படைத்த விந்தைகள் யாவும்
மண்ணுக்குள் மறைந்து போகும் பிரதிகள்
178.வறுமையின் நிழல்களைக் கண்டு
பட்டாம் பூச்சிகள் நிர்வாணமாகிறது
179.இளம் பச்சைக் காட