தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 18 --- முஹம்மத் ஸர்பான்
171.ஓர் ஆகாயத்தை வைத்து கொண்டு
பல கோடி வீண்மின்கள் சண்டையிடுகிறது
172.வேர்களின் சுவாசத்தை களவாடி
சாதாரண மண்ணும் உரமாகிறது
173.மக்களை ஏமாற்றும் அரசியலை விட
ஓடுகின்ற சாக்கடை வெள்ளம் தூய்மையானது
174.பூக்களை கையில் வைத்துக் கொண்டு
குப்பைகளை தேடியலைகிறது ஆசைகள்
175.பொறாமை மனதில் விளைகின்ற போது
மனிதனின் ஏழாம் அறிவு மிருகமாகிறது
176.நாகரீக உலகின் பொருளாதாரத்தில்
விபச்சாரச் சந்தைகள் ஒரு குறிகாட்டி
177.இறைவன் படைத்த விந்தைகள் யாவும்
மண்ணுக்குள் மறைந்து போகும் பிரதிகள்
178.வறுமையின் நிழல்களைக் கண்டு
பட்டாம் பூச்சிகள் நிர்வாணமாகிறது
179.இளம் பச்சைக் காடுகளின் கவர்ச்சியால்
முகிலும் மழையாக பூமிக்கு வருகிறது
180.முடவனின் வாசலில் பூத்த பூக்களெல்லாம்
கன்னி கழியாத மங்கையின் ஏக்கங்கள்