காதலும் சாதியும்

காதலும் சாதியும்

மனமொத்து வந்தவொன்று
சாதியில் சிக்கி
நீதிக்கி போராடுகிறது

ஐம்புலனால் உணர
முடியாத ஒன்று
இன்று இரு உயிரை
தினந்தினம் கொல்கிறது
ஏன் இந்த நிலை ?

காதல் பொதுதானே
சாதி பார்த்தா தோன்றும்
சாதியை ஒழிக்கும் ஆயுதம்
காதல் என்கிறார்கள்
நடைமுறைப்படுத்த
உயிரையே பணயம் வைக்கிறோம்
ஆனால் வெற்றி
நூரில் ஒருவருக்கே

என்ன இருக்கிறது அதில்
எமக்கு புலப்படவில்லை
ஒருவேளை எம்
பார்வையும் புரிதலும் தவறோ

தன் பிள்ளையைவிட
உயர்ந்த ஒன்றாகிறது
தன் பிள்ளையை தன்
கையாலே கொல்ல தூண்டுகிறது
ஏன் எங்களை பெற்றீர்கள் ???

கல்லாதவன் மதிகெட்டான்
என்றால் கற்றவனும்
மதிகெட்டானே சாதியால்
ஏன் இந்த நிலை ?

காதலுக்கும் சாதிக்கும் இடையில்
எத்தனை துயரங்கள்
எத்தனை வலிகள்
அனைத்தையும் தாங்கிக்கொண்டு
தினந்தினம் போராடுகிறோம்
உங்கள் மனம் மாறும்
என்ற நம்பிக்கையில்

நட்பில் சாதியை ஒழித்துவிட்டு
ஏன் திருமணத்தில் மட்டும்
தூக்கிப்பிடிக்கிறீர்கள் ?

இத்தனை தடைகளையும் தாண்டி
இங்கு ஓர் காதல்
வெற்றி கொண்டால் அதுவும்
பெற்றோரின் துணையோடு
வெற்றி கொண்டால்
அந்தக்காதல் மதிக்கத்தக்க ஒன்று
அந்த பெற்றோர்கள்
போற்றுதர்க்குறியவர்கள்

எழுத்து சே.இனியன்

எழுதியவர் : சே.இனியன் (13-Apr-20, 10:13 am)
பார்வை : 193

மேலே