மலரும் மங்கையும்

வசந்த காலம் இது
பூஞ்சோலையெல்லாம் பூத்து குலுங்கும்
பூக்கள் ஆயிரம் ஆயிரம்
வண்டுகளின் ரீங்காரம்
சிங்கார (சிருங்கார) ராகம் ........
எத்தனை அழகு இந்த
வண்ண வண்ணப் பூக்கள்
பார்வைக்கு விருந்து இவை-ஆனால்
தொட்டால் துவண்டுவிடும் வாடி விடும் ....
தொடாது வாடுகின்றாள் அவள்
மலர்போல் மலர்ந்த கன்னியவள்
காதலன் ஸ்பரிசத்தில் இன்புற்று மலரும்
கன்னி மலர் அவள் ...தொட்டால் மலரும் மலர்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Apr-20, 1:54 pm)
Tanglish : malarum mangaiyum
பார்வை : 108

மேலே