உந்தன் சிரிப்பில் இதயத்தில் வானவில் ஏழாய் விரியும்

கதிரவன் கைவிரிய காலை விடியும்
கதிரவன் கையில் கமலம் மலரும்
உதிரா மலரான உந்தன் சிரிப்பில்
இதயத்தில் வானவில் ஏழாய் விரியும்
நதியென வாராயோ நீ

---- ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (10-Dec-24, 11:49 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 61

மேலே