உன்னில் இனிக்கும்

உன்னில் இனிக்கும்....
10 / 12 / 2024

கண்ணே உந்தன் கண்ணை கண்டால்
கவிதை நூறு ஆறாய் பெருகும்
பொங்கும் இளமை தன்னை கண்டால்
காவியங்கள் தானாய்த் தோன்றும்
சிறுத்த இடையை கண்ட பொழுதில்
ஹைக்கூ கவிதைகள் நெஞ்சில் நிறையும்
மானின் துள்ளல் காலில் கண்டால்
காதை நூறு கதையாய் உருகும்.
சிங்கப்பெண்ணே உன் போர்குணம் கண்டால்
புறநானுறு படைத்திடத் தோன்றும்
அணைத்து நீயும் அறிவுரை செய்தால்
அகநானுறு பொருளும் விளங்கும்
ஆக மொத்தம் முழுதாய் காண
முத்தமிழும் உன்னில் இனிக்கும்.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (10-Dec-24, 8:18 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : unnil inikkum
பார்வை : 122

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே