மண் காப்போம்

#மண் காப்போம்..!

ஊருலகம் காத்திடுவாள் மண் மாதா
உணவளி த்து உயிரளிப் பாள் மண்மாதா
ஆறு ஏரி நீர்நிலைக்க அவளே
ஆதரவாய் வயல் வெளிக்கும் அவளே..!
. !

மாடி மனைப் பெருக்கிட வே இன்று
மண்ணை வெட்டிச் சாய்க்கிறார்கள் கொன்று
கேடு கெட்டச் செயல் புரிவோர்த் தேடி - சிறைக்
கூட்டில் அடைக்க நன்மைப்பெருகும் கோடி..!

இந்தியாவின் எல்லை தன்னில் நின்றே
எதிரிப்படை நிற்குது மண் தின்றே
அந்தக் காலை உடலை விட்டு நீக்கு
எல்லைத் திருட்டு
சங்கடங்கள் போக்கு..!

மண்ணழிக்க மரங்கள் அழிவதுண்டு
மரமழிக்க மண்ணும் சிதைவதுண்டு
எண்ணிப் பார் த்து சிந்தையில்நீ இருத்து
மண்ணோடு மர வளங்கள் காத்து..!

கண் போனால் காட்சிகளும் போகும்
மண் போனால் மானுடமும் சாகும்
கண்ணுக்கும் மேல் தானே மண்ணும்
கயவர்க்கு புரியவில்லை இன்னும். !

நெல்லு நட்டு வாழ்ந்த காலமின்பமே
- வயலில்
கல்லு நட்டு வாழுங்கால மின்னலே
உழுநிலமும் கண்ணெதிரில் கடவுளே
உணர்ந்து நடக்க ஓடிவிடும் இடர்களே..!

விவசாய மண்ணில் மனிதன் வீடு
விரவிக் கிடக்கப் பசிக் குணவும் ஏது
விவரங்கெட்ட செயல்களையே
விடு ப்பாய்
தவமிருந்தும் தாய்மண்ணைக் காப்பாய்..!

#சொ. .சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (18-Jan-25, 10:01 am)
சேர்த்தது : C. SHANTHI
Tanglish : man kaappom
பார்வை : 24

மேலே