இருவிழிகள் -பாகம் 2
இருவிழிகள்
கலை என்றே
நமை இணைப்போர்
நம் காதலின்
ஆழம் அரியாதோர்
உனை விடுத்து
நான் ஏதிங்கு ?
வழிப்போக்கனின் வாழ்வில்
மாயங்கள் பல
ஆனால் அவையனைத்தும்
வாழ்வாகிடாது
அனைத்தும் இழந்து நின்றேன்
ஆறுதலாய் நின்றாய்
ஏன் என்று ஒருபோதும்
உன்னிடத்தில் வினவியதில்லை
சிறு சிறு அமைதியும்
சின்ன சின்ன சந்தோசமும்
மிகப்பெறும் ஊக்கமும்
உன்னிடத்தில் கண்டேன்
ஆதலால் இன்று வாழ்வாகி நின்றேன்
உம்மை அரிய
உனதாசைகள் அரிய
என் முயற்சிகள் எராளம்
அதில் தோற்கிறேன் தினந்தினம்
ஆயினும் உள்ளம் வியக்கிறாய்
எப்படி முடிகிறது உம்மால்
ஏன் என்று கேட்கத்தான் ஆசை
ஆனால் அன்றும் இன்றும்
விடைகளில் ஓர் வினா
என்பதுபோல் பிரம்மிக்கச்செய்கிறாய்
உன் கரம் பிடித்தே
உன் நிழலை தாங்கியே
உன் பின்னே தொடர்கிறேன்
எதைக்காண அழைக்கிறாய்
என்றே யான் கேட்கும் முன்னமே
விழி மூடிக்கொள்கிறாய் நீ
அவ்விழியால் எம்மை
வியப்படையச்செய்கிறாய் நீ
உன் ஏக்கம் என் தேடலாக
எனதாசை உன் தேடலாக
இணையும் பொழுதிலே
உன்னிடத்தில் சரணடைந்தே
இன்று தனிப்பண் படைந்தேனோ
இனியாவும் நீயென்றே என
பார் உரைக்கச் சொன்னேனோ
என் காதலே
எழுத்து சே.இனியன்