நின்னை நினைவினில் நான்காண

நிலவு நிகர்த்திடும் நின்முகத்தின் நல்லெழிலை
அந்தி நிலவினில் கண்டேன் எனைநீ
கனவுப் பொழிலினில் காண்


நிலவு நிகர்த்திடும் நின்முகத்தின் நல்லெழில்
நின்னை நினைவினில் நான்கா ணநீயும்
கனவுப் பொழிலிலெனைக் காண்
----------------------------------------------------------------------------------------------------------
யாப்பு பயில்வோர் குறிப்பு :

டாக்டர் VKK மோனை அழகு மிளிர பரிந்துரைத்த ஈற்றடி
கனவுப் பொழிலினில் காண் படி அமைந்த சிந்தியல் வெண்பா
அடி மோனை சீர் மோளைப் பொலிவு இப்பாக்களின்
சிறப்பு
எதுகை அமையாது புனையப்பட்டதால்
இவை பலவிகற்ப சிந்தியல் வெண்பா ஆகும்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Oct-22, 6:23 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 108

மேலே