தோல்வி 2

காதலில் தோல்வியுற்றதால்தான்
காதலின் அருமை உணர்ந்தேன்.
கல்வியில் தோல்வியுற்றதால்தான்
கல்வியின் மேன்மை அறிந்தேன்.
நட்பினில் தோல்வியுற்றதால்தான்
துரோகத்தின் வலிமை உணர்ந்தேன்.
வாழ்வினில் தோல்வியுற்றதால்தான்
வாழ்வின் மகத்துவம் தெரிந்தேன்.
தோல்வியே ...
நீ ஊக்க மருந்தாய்
இல்லாமல்போனாலும்
தூக்க மருந்தாய் ஆகிவிடாதே..!
ஆக்க பூர்வமாய்
எதுவும் செய்யாமல்போனாலும்
அழிவுப் பாதைக்கு
அழைத்து சென்றுவிடாதே...!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (28-Oct-22, 10:14 am)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 123

மேலே