ஒற்றை பார்வை
ஒற்றை பார்வையும்
அழகிய மென்சிரிப்பும்
இறுகிய நெஞ்சில்
இளந்தென்றலை வீச
ஏனோ ஓர் ஈர்ப்பு
சித்திரையில் ஓர் ஈரப்பதம்
கார்த்திகையாய் ஊடுருவ
அவள் பார்வை படும்தூரமெல்லாம்
புதுப்பித்த புதுமைபித்தனாய்
அவள்முன் நிற்கின்றேன்
எல்லாம் அவளுக்காக
என் தயக்கத்தில்
என் வெட்கத்தில்
என்ன சுகம் கண்டாலோ
என்னை தள்ளிவைத்தே
ரசிக்கிறாள் கொஞ்சம்
சீண்டவும் செய்கிறாள்
அவளை அறியாமல்
அத்தனை கூட்டத்தில்
அவ்வளவு சத்தத்தில்
அவளின் ஒவ்வொரு நகர்வும்
என் துடிப்பை
என் தேடலை அதிகப்படுத்த
எனை சுற்றியே வருகிறாள்
என்னை காணாது கொள்கிறாள்
வறண்ட நிலமொன்றில்
காட்டாறு பெருக்கெடுக்க
தடுப்பணைகள் எல்லாம்
தவுடு பொடியானது இன்று
ஆம் அவள் என்னை வென்றால்
இமையால் இழைப்பாரல் தந்து
பட்டசைவில் பூந்தென்றல்வீசி
கண்ணக்குழியில் கவியாயிரம் உரைத்து
செவ்விதழ் ஓரம் என்
மன நிறைவை உரைத்தாள்
எனை வென்று
என்னை தேட தூண்டியவள்
ஏனோ இந்த வழிப்போக்கனின்
வாழ்வின் வழியை
மாற்றியமைக்கிறாள்
காரணம் யார் அறியோர்
காலம் விடை சொல்லும்
எழுத்து சே.இனியன்