kabi prakash - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : kabi prakash |
இடம் | : madurai |
பிறந்த தேதி | : 20-Dec-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 123 |
புள்ளி | : 23 |
சிறந்த பாடலாசிரியர் என் கனவு
திறமைகள் வெளிப்படையாக மதிக்கப்படவில்லை....
மறைமுகமாக பறிக்கப்படுகின்றன....
நானும்( உடல்) என் நீயும் ( உயிர்)
நம் நினைவுகளுடன்பயணிக்க...
ஜன்னல் கம்பியை எண்ணி செல்கிறேன்
உன் சிறை கைதியாக....
ஜன்னல் வழி தென்றல்
உன் பிரிவை ஞாபகபடுத்துகிறது
சத்தம் இல்லா
முத்தங்களால்.... 😘😍😍😍😍😍
என் மனதினில் பூத்தாய்,
பூவாய்...
அன்பு(பூ)வாய்!!!
என் விழிதனில் வழிந்தாய்,
நீராய்....
ஆனந்த கண்ணீராய்!!!!
என் செவிதனில் நுழைந்தாய்,
இசையாய்.....
தமிழ் இசையாய்!!!!
என் நாவினில் எழுந்தாய்,
மொழியாய்...
செம்மொழியாய்!!!!
என் உயிரினில் புகுந்தாய்,
காற்றாய்....
நீர் ஊற்றாய்....
என்னைத் தழுவிச்சென்றாய்,
தென்றலாய்.....
என் முதல் காதல் நீயடி...
உன்னைப் பிரிய மாட்டேன் நானடி... ,
கனவிலும் ; சாவிலும் கூட
உன்னை மறக்க மாட்டேன்..
வெறுக்க மாட்டேன்...!!!
என் தாயும் நீயடி ;
என் சேயும் நீயடி;
என் காதலியும் நீயடி;
என் முதல் காதலும் நீயடி....
உன் நினைவுகளால்
மட்டும் என் வாழ
வெற்றி பெற
வாழ்த்துகிறேன்
வெளிப்படையாய்
கைகுலுக்குகிறேன்
வெற்றிபெற்று வருகையிலோ
உள்ளுக்குள் பொருமுகிறேன்
உதட்டளவில் பாராட்டுகிறேன்
என்னிலும் ஒருபடி
ஏறிவிடாதபடி
எச்சரிக்கையாய் இருக்கிறேன்
முட்டி மோதி
மூச்சுத் திணறுகையில்
குழிபறிக்க வழிபார்க்கிறேன்
முயன்று முன்செல்கையில்
குறிவைக்க வெறி கொள்கிறேன்
எல்லாரையும் விழுங்கி ஏப்பம் விடும்
இந்த மனித நாடகத்தில்
என் பாத்திரம் எம்மாத்திரம் ?
அதைமட்டும் ஏனோ
அவ்வப்போது மறந்துவிடுகிறேன்.
ஏனோ...!
என் மனம்
உன்னையே தேடுகிறது...
ஐயயோ....
என் அண்ணனும்
உன்னை விரும்பிகிறானா...?
அட கடவுளே...
என் நண்பனுமா? ?
ஏ...!! பணமே சொல்
அப்படி என்ன இருக்கு
உன்னிடம்...
அனைவரையும்
வசியம் செய்யும்
வசிய ஷிப்பா....? ?
கனவே கனவே ஓயாதோ
நினைவே நினைவே நில்லாதோ
உன்னனால் நான் நானில்லை
உன்கரையில் நான் அலையில்லை
அதிலே சேர்ந்த மணலாய் நான்
உறங்கினாலும் நீ நீங்குவதில்லை
உறங்கவும் என்னை நீ விடுவதில்லை
உயிரிலே சேர்ந்த உணர்வாய் நீ
நீரிலே மீனானனோ நீயின்றி நானில்லையோ
போரிலே வாளேந்தியே சூடுவியோ வெற்றிமாலையோ
தேரிலே தோளேந்தியே வானேறியே சேர்ப்பாயோ
ஊரிலே யாருமே இதுபோலில்லையென செய்வாயோ
மோரிலே ஊறிய மிளகாய்நான் ஆனேனோ
சோற்றிலே சேர்ந்த குழம்பாய்த்தான் கலந்தேனோ
நெஞ்சிலே நியாபகம் நீங்கதான் வில்லையே
ஊஞ்சலே ஆசையின் நாளங்கள் ஆடுதே
கிளிஞ்சலே நேசத்தின் நிலங்கள் சேர்க்குதே
சாய்ஞ்சுதான் தோளோடு சேரவே ய
என் கண்ணே
என் கண்ணே...
உன் இமை மூடு...
என் செவியே..
என் செவியே...
இதமான இசை கேளு...
என் இரவே
என் இரவே
நீ கொஞ்சம் நீளு....
சந்திரனார் அவள் கண்ணில்
சங்கமிக்க...
வாயு பகவான் அவள்
கூந்தலுடன் விளையாட....
இடை தெரிய
நடை போடும்....
என் உயிரில் கலந்த
மெய்...
உயிர்மெய்யாக
என் கனவில்
வருகிறாள்....
பால்கொண்ட கிண்ணங்களில் தோய்ந்து எடுத்த கன்னங்களில் பசுநெய்யும் தேம்பிவழிகின்ற ............
........உன் வாடாத மலர்இதழில் தேனூறுகின்ற போது வண்டுகள் வட்டமிடாதோ..................
தென்திசை தேடி வரும் தென்றல் காற்று உன்னழகை வருடி வர வந்தபாதை மறந்து உன்னடியில் தஞ்சமென உன்னுடலில் சுவாசமென தேங்கி வெளிவரும் போது நீ கண்ணகியின் அம்சமென கற்புற்ற பெருமையை போற்றி செல்லும்
கற்பனைகளின் உச்சத்தில் வரையப்பட்ட ஓவியத்தில் உயிர் கொண்ட சிற்பத்தின் நிழல் கூட நீயில்லை என யான் கண்ணுற்ற அழகிற்கு எல்லை இல்லவேஇல்லை.
எனை மயக்க வந்தவன் இவனோ
மாயக்கண்ணன் இவனோ...
எனை மயக்க வந்தவன் இவனே
மாயக்கண்ணன் இவனே....
நாளும் நீயும் வந்து காதல் செய்யேன்...
நீயும் வந்து காதல் செய்யேன்
மாயக்கண்ணனே....
நானும் நீயும் காதல் செய்ய காலம் வந்ததே...
நீயும் வந்து காதல் செய்யே
மாயக்கண்ணனே....
தினமும் இரவும் காதல் சண்டை போட..
மனதும் மனதும் சேர்ந்து தாளம்
போட...
எனது அழகனே வாராய்
உறங்க மடி கொஞ்சம் தாராய்...
எனது கவிஞனே வாராய்
கதம்ப கவி கொஞ்சம் பாடாய்...
உன் ஓர் விழி பார்வையால்
என் ஈரிதழ் வாடுதே...
உன் பூவிதழ் சேருமோ...
இதை பூலோகம் தாங்குமோ....