sanjithakrishna - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : sanjithakrishna |
இடம் | : Jaffna |
பிறந்த தேதி | : 19-Jun-1998 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 121 |
புள்ளி | : 12 |
கவிதைகளின் காதலன்.
இணையதள இரவு
இமைக்காத பொழுது
அவசர உணவு
ஊரெங்கும் தலைகள்
வழியெல்லாம் வாகனம் நெருக்கடி
வரிசையில் கடைசியில் நிற்கும் வேதனை
காத்திருக்கும் நிமிடங்கள்
கலைந்து போன கனவு
எட்டா கனியாய் வெற்றி
என்ன தான் சோர்வு வந்தாலும்
முடிவில்லா பயணத்தில்
முடியாமல் தொடருது முயற்சியும் நம்பிக்கையும் !!!
-கலைப்பிரியை
கண்ணைமூடி எண்ணம் கொள்ள நாற்திசையும் பாய்ந்துவரும் வெள்ளமென உள்ளமதில் ஊற்றெடுக்கும் கவிதையிது..........
தொடாமல் மலரும் விழிகளை விடாமல் இமைக்கும் இமைகள்
காரிகை உன் ஈரிதழ் மொட்டவிழ்ந்து மெட்டிசைக்கும் அது மெல்லிசையில் சொட்டுகின்ற மெட்டுக்களாகும்.
கவிபாடும் கற்பனை ஓவியம் உயிர்கொண்டு உணர்ச்சிகளை தூண்டுது.
மயில் இட்ட இறகால் விழி தீட்ட வான் சிமிட்டும் விண்மீன்களும் நீந்துகின்ற கண்மீன்களாய் பாருலகில் படைத்திட்ட விண்ணுலகமொன்று மின்னொளி பரப்பும் . உயிருலகில் ஏற்றிய அகல் விளக்குகளிரண்டும் இரவுகள் முழுவதும் பகல்வெளிச்சத்தில் உனைக்காணும் கனவுகளாகும்.
கன்னம் முழுவதும் வண்ணம் பூசிய கொன்றைப்ப

மாலை நேரத்தில்
இருள் சூழ்ந்த போதும்
நீலப்படையில் மதியை காணோம் ;கார்மேகம் வந்து
போர்தொடுத்த தாலோ
மழைவந்து மரக்கிளையில் மயிலொன்றை சிறைவைத்த பொழுதில் தோகை விரித்து குடையொன்று செய்ய இலைமறைந்த வண்ணத்தில் வானவில்லொன்று தெரியுது.
மழைத்துளியின் வேகம் கரைபுரளும் வெள்ளத்தில் நுரைதள்ள செய்யுது.
கண்களிரண்டும் என்னை மயக்கும் அம்புகள்
ஓராயிரம் விண்மீன் மழையை ஒரு நொடியில் தந்திடும். இமையற்ற கண்கள் வேண்டும் கணப்பொழுதும் மறையாத இவ் அதிசயத்தை காண .
ஈரிதழ் தாண்டி வரும் உன் சுவாசக்காற்று மெல்லிசையில் ஒரு வர்ணத்தில் மெட்டமைத்த பாடலென எடுத்து விடும் போது காற்றலையில் மிதந்துவரும் கானங்களாகி செவிவழியே பற்றுகிறபோது நான் உருகி
என் நா உருகி தேனாய் மாறி உள்ளத்தில் மழையாய் பொழிய...........இனிமையிலும் இனிமை
முழுநிலவிற்கும் இவள் முகத்திற்கும் வேறுபாடறியா விண்மீன்கள் தம் நிலையில் தடுமாறுது
பெண்களை மட்டும்தான் கவிகளால் வர்ணிக்கிறார்களே! ஏன் ஆண்களை கவிகளால் வர்ணிப்பதில்லை? ஆண்களால் ஆண்களை பற்றி வர்ணிக்காது எதிர்ப்பாற்கவர்ச்சியால் பெண்ணழகை வர்ணிக்கிறார்கள் என்றபடி பெண்கள் ; ஆண்களை கவிபாடி அழகுபடுத்தவேண்டுமல்லவா?? கவிகள் பெண்களுக்கு மட்டும்தானா? ஆண்களுக்கு இல்லையா?

கடவுள் இருக்காறா? இல்லையா?
மற்றவர்களின் ரூபத்தில் தெரிவது கடவுள் என்று கூறாமல் மிகச்சரியான பதில் கூறவும்.