sanjithakrishna- கருத்துகள்

உங்கள் யதார்த்தமான வரிகள் மனதில் ஆழப்பதிந்து அற்புதம் செய்கின்றதே.......உலக வாழ்வு பற்றிய உங்கள் சிந்தனைகள் தொடரவேண்டும்

நம்மை சுற்றியுள்ளொர் நானுறு காசு சம்பாதிக்க நாம் மட்டும் நாலு காசுடன் போதுமென இருக்க முடியாது. பொருளுக்கு ஏங்கும் பொருளற்ற வாழ்வை வாழும் பலருக்கு மத்தியில் சிந்தித்து சிக்கனமாய் வாழ்ந்து மகிழ்வது என்னவோ கடினம்தான்.

திரும்ப ஒருமுறை வாசியுங்கள்..பொருள் விளங்கும்

ஆனால் தற்காலத்தில் நிலைவேறு பெண்களைதான் கவிதையால் வர்ணிக்கிறார்கள்.

கடவுள் நீங்கள் நினைக்கும் ரூபத்தில் இருக்கிறார் என்பது வெறும் நம்பிக்கையே.ஆனால் இந்தப்பிரபஞ்சம் ஆக்கபபட்ட ஒவ்வோன்றையும் கடவுளாக கொள்ளப்பட வேண்டும்.இது வரை ஞானிகள் கடவுளை உணர்ந்திருக்கிறார்களே தவிர கண்டதில்லை.. உண்மையில் எல்லா உயிர்களும் கடவுளே.ஆனால் ஞான நிலை அடையப்படும் போதுதான் உணரப்படும்.ஞான நிலை அடைந்தபின் நான் என்ற உணர்வு உருவம் இருக்காது.பிரபஞ்சத்தோடு கலந்து இயக்குகின்ற அடிப்படைப்பொருளாக மாறிவிடுவோம்."அகம் பிரம்மாஸ்மி". இந்த உலகில் இறை என்பதற்கு வடிவம் கொடுத்து வணங்குவது உலகவாழ்விற்கான நம்பிக்கையை அடைவதற்கு மட்டுமே.கடவுளை காணமுடியாது மெஞ்ஞானத்தால் உணரலாம். இவற்றையெல்லாம் விளங்க எமக்கு அறிவு போதாது. சித்தர்கள் கடும் தவம் ஆற்றுவது இவற்றை விளங்கவே

சாதி என்பது தமிழர் வாழ்வில் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ஏற்படுத்தப்பட்டு தொடரப்பட்டது.எம்முன்னோர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காகதான் இதை ஏற்படுத்தியுள்ளனர்.கடந்த சில நூற்றாண்டுக்கு முன்னர்தான் சாதி நீக்கப்படவேண்டும் என்ற குரல் ஒலிக்கத்தொடங்கியது.சாதி என்ற விடயத்தை விரிவாக விவாதித்தபின் முடிவுகளுக்கு வருவது நல்லது


sanjithakrishna கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே