முடிவில்லா பயணம்

இணையதள இரவு
இமைக்காத பொழுது
அவசர உணவு
ஊரெங்கும் தலைகள்
வழியெல்லாம் வாகனம் நெருக்கடி
வரிசையில் கடைசியில் நிற்கும் வேதனை
காத்திருக்கும் நிமிடங்கள்
கலைந்து போன கனவு
எட்டா கனியாய் வெற்றி
என்ன தான் சோர்வு வந்தாலும்
முடிவில்லா பயணத்தில்
முடியாமல் தொடருது முயற்சியும் நம்பிக்கையும் !!!

-கலைப்பிரியை

எழுதியவர் : கலைப்பிரியை (26-Jun-18, 4:03 pm)
சேர்த்தது : kalaipiriyai
Tanglish : mudivilla payanam
பார்வை : 426

மேலே