அதிசய அழகி
கண்ணைமூடி எண்ணம் கொள்ள நாற்திசையும் பாய்ந்துவரும் வெள்ளமென உள்ளமதில் ஊற்றெடுக்கும் கவிதையிது..........
தொடாமல் மலரும் விழிகளை விடாமல் இமைக்கும் இமைகள்
காரிகை உன் ஈரிதழ் மொட்டவிழ்ந்து மெட்டிசைக்கும் அது மெல்லிசையில் சொட்டுகின்ற மெட்டுக்களாகும்.
கவிபாடும் கற்பனை ஓவியம் உயிர்கொண்டு உணர்ச்சிகளை தூண்டுது.
மயில் இட்ட இறகால் விழி தீட்ட வான் சிமிட்டும் விண்மீன்களும் நீந்துகின்ற கண்மீன்களாய் பாருலகில் படைத்திட்ட விண்ணுலகமொன்று மின்னொளி பரப்பும் . உயிருலகில் ஏற்றிய அகல் விளக்குகளிரண்டும் இரவுகள் முழுவதும் பகல்வெளிச்சத்தில் உனைக்காணும் கனவுகளாகும்.
கன்னம் முழுவதும் வண்ணம் பூசிய கொன்றைப்பூவை தென்றல் நனைத்துச்சென்று மணம் கவுழும் மலர்மாலையை சூடிய மங்கையை உன்னிடத்தே தஞ்சமடைய செய்யும்.
பூவுலகில் படைத்திட்ட பொன்மான் உனைக்கண்டு கங்கைமகள் கலங்குகிறாள்.
ஆதவனும் பாதையைமாற்றி பூவுலகில் நாள்முழுதும் உனைத்தேட .........அழகுக்கும் அறிவுக்குமிடையான யுத்தத்தில் பெண்மை செய்யும் வித்தைகளில் ஆண்மை அறிவிழந்து போகும்.
உயிருக்கும் உணர்ச்சிக்கும் இடைவெளி அது பேரின்பத்தை மறைத்து சிற்றின்பத்தை அளிக்கும்