மழைவரும்

வனங்களை அழித்து வறட்சியைக் கூட்டும்
சனங்களைத் திருத்திச் சரிசெய் திட்டால்
மனத்தினில் இன்ப மழைவரு மன்றோ
**
நதிகளில் மணலை நாளும் அகழும்
மதியிலா மாந்தர் மடமையை மாற்றிடப்
புதியதாய் பெய்யும் புயல்மழை யன்றோ
*****
மரங்களை நாட்டி வளர்த்திடு போதும்
தரமுடன் நிழலும் தந்திடு மவையும்
வரமென மழையை வழங்கிடு மன்றோ.
*******.
**மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (28-Jun-18, 1:20 am)
பார்வை : 204

மேலே