பெண் எனும் அதிசயம்

கண்களிரண்டும் என்னை மயக்கும் அம்புகள்
ஓராயிரம் விண்மீன் மழையை ஒரு நொடியில் தந்திடும். இமையற்ற கண்கள் வேண்டும் கணப்பொழுதும் மறையாத இவ் அதிசயத்தை காண .
ஈரிதழ் தாண்டி வரும் உன் சுவாசக்காற்று மெல்லிசையில் ஒரு வர்ணத்தில் மெட்டமைத்த பாடலென எடுத்து விடும் போது காற்றலையில் மிதந்துவரும் கானங்களாகி செவிவழியே பற்றுகிறபோது நான் உருகி
என் நா உருகி தேனாய் மாறி உள்ளத்தில் மழையாய் பொழிய...........இனிமையிலும் இனிமை
முழுநிலவிற்கும் இவள் முகத்திற்கும் வேறுபாடறியா விண்மீன்கள் தம் நிலையில் தடுமாறுது