சாக்கடை டீக்கடை சாயந்திர நிலா

சாக்கடை ஓரம் அமைந்திருந்த ஒரு
டீக்கடையில் சாயந்திர வேளையில்
சாய் பருகிக் கொண்டிருந்தோம்
சாயந்திர நிலா உன்னையும் என்னையும்
தொட்டுத் தழுவிய போது மகிழ்ந்த நான்
சாக்கடை மீதிலும் வீசியபோது வருந்தினேன்
பாரபட்சமற்ற பௌர்ணமி நிலாவின்
பொது உடமையை பாராட்டு என்றாய் நீ !