கனவில் அவள்

என் கண்ணே
என் கண்ணே...
உன் இமை மூடு...

என் செவியே..
என் செவியே...
இதமான இசை கேளு...

என் இரவே
என் இரவே
நீ கொஞ்சம் நீளு....

சந்திரனார் அவள் கண்ணில்
சங்கமிக்க...

வாயு பகவான் அவள்
கூந்தலுடன் விளையாட....

இடை தெரிய
நடை போடும்....

என் உயிரில் கலந்த
மெய்...
உயிர்மெய்யாக
என் கனவில்
வருகிறாள்....

எழுதியவர் : kabi prakash (20-Nov-17, 2:05 am)
சேர்த்தது : kabi prakash
Tanglish : kanavil aval
பார்வை : 267

மேலே