கனவே
கனவே கனவே ஓயாதோ
நினைவே நினைவே நில்லாதோ
உன்னனால் நான் நானில்லை
உன்கரையில் நான் அலையில்லை
அதிலே சேர்ந்த மணலாய் நான்
உறங்கினாலும் நீ நீங்குவதில்லை
உறங்கவும் என்னை நீ விடுவதில்லை
உயிரிலே சேர்ந்த உணர்வாய் நீ
நீரிலே மீனானனோ நீயின்றி நானில்லையோ
போரிலே வாளேந்தியே சூடுவியோ வெற்றிமாலையோ
தேரிலே தோளேந்தியே வானேறியே சேர்ப்பாயோ
ஊரிலே யாருமே இதுபோலில்லையென செய்வாயோ
மோரிலே ஊறிய மிளகாய்நான் ஆனேனோ
சோற்றிலே சேர்ந்த குழம்பாய்த்தான் கலந்தேனோ
நெஞ்சிலே நியாபகம் நீங்கதான் வில்லையே
ஊஞ்சலே ஆசையின் நாளங்கள் ஆடுதே
கிளிஞ்சலே நேசத்தின் நிலங்கள் சேர்க்குதே
சாய்ஞ்சுதான் தோளோடு சேரவே யாசிக்குதே
மாஞ்சுதான் போன மூளையும் வழியை யோசிக்குதே